யுனிகோடு
யுனிகோடு (Unicode)
என்பது எழுத்து வடிவிலான தகவலை எம்மொழியிலும் கணினிகளில் பயன்படுத்த உதவும்
உலக அளவிலான குறிமுறை நியமமாகும்
இத்தரத்தில் தற்காலத்தில் உலகில் பரவலாக பயன்படுத்தப்படும் பல்வேறு
வரிவடிவங்கள் அடங்கியுள்ளன. அவற்றுடன், சில அரிதாக பயன்படுத்தப்படும்
வரிவடிவங்களும், கணிதம், மொழியியல் போன்ற துறைகளில் பயன்படும் சில
வரியுருக்களும் அடங்கியுள்ளன.
தற்போது கணியுலகில் வெவ்வேறு வரிவடிவங்களுக்கான ஒன்றாக பல்வேறு குறிமுறைகள்
பயன்பாட்டில் உள்ளன. மேலும், தமிழ் போன்ற சில மொழிகளில் ஒரே வரிவடிவத்திற்கு
பல்வேறு குறிமுறைகளும் காணப்படுகின்றன. பன்மொழிச் சூழல்களில் இத்தகைய
வேறுபட்ட குறிமுறைகளை பயன்படுத்துவதால் பல்வேறு சிக்கல்கள் உருவாகின்றன.
யுனிகோடு என்பது இத்தகைய வேறுபட்ட குறிமுறைகளுக்கு மாற்றாக ஒரு நியம
குறிமுறையை நிறுவுவதற்கான திட்டமாகும். இன்றைய அளவில் யுனிகோடு ஒரு
முழுமையான குறிமுறையாக அமைந்து பல்வேறு கணினி சூழல்களில் பாவிக்கப் படுகிறது.
புதிதாக தோன்றும் XML
போன்ற தரங்களும் யுனிகோடை அடிப்படை கட்டமைப்பாகக் கொண்டு உருவாக்கப்
படுகின்றன.
வரலாற்றுப் பின்னணி
ஆரம்பகாலத்தில் தமிழ் தட்டச்சுக் கருவியை தழுவி பாமினி என்கின்ற எழுத்துரு
அறிமுகம் ஆனது. இது ஆங்கிலச் சொற்களுக்குப் பதிலாக தமிழை உட்புகுத்தியது.
எனினும் காலப்போக்கில் இணையத்தின்
(Internet) வரவால் நடைமுறைச்சிக்கல்களை
உருவாக்கியது. இதே காலப் பகுதியில் வேறு பல நியமங்களும் உருவாகத் தொடங்கின.
இதனால் கோப்புக்களை (File) பரிமாறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. இது
மாத்திரம் இன்றி பல தரவுத் தளங்களில் (Database) ஒரு எழுத்துருவை மாத்திரமே ஏற்று கொள்வதால்
தமிழையும் ஆங்கிலத்தையும் ஒன்று சேற்க இயலாமல் போனது. எனவே இவற்றைக்
கருத்திற் கொண்டு தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை
(i.e. TSCII Tamil Standard Code for Information Interchange)
உருவாகியது.
இதில் முதல் 0-127
எழுத்துக்கள் தகவல் பரிமாற்றத்திற்கான
அமெரிக்க முறையை (i.e. ASCII -
American Standard Code for Information Interchange) ஒத்தது. மிகுதியான 128-155
இல் தமிழ் எழுத்துக்கள் நிரப்பப் பட்டன. இதைத்தொடர்ந்து தமிழ் நாட்டில்
நடைபெற்ற தமிழ் இனைய மகாநாட்டில் தமிழ் 99 விசைப் பலகை பரிந்துரைக்கப்பட்டது.
விண்டோஸ் 3.1, 95, 98 மற்றும் Me
பதிப்புக்களில் TSCII
பெரும்பாலும் பயன் படுத்தப் படுகிறது.
யுனிக்கோடானது ஒவ்வொரு மொழிக்கும்
ஓரிடம் என்று உலகின் பிரதான மொழிகளை ஒன்றினைத்து 16 பிற்றில் (TSCII 8
பிற்) அறிமுகம் ஆனது. விண்டோஸ்
2000/XP/2003 தமிழ் யுனிகோட் வசதியும்
அப்பிள் வகைக் கணினியில் Mac OS 10.4
இலும் தமிழ் யுனிகோடு வசதியுள்ளது. இன்று அநேகமாக உலகில் உள்ள தேடும்
இயந்திரங்களான (Search Engines)
கூகிள் மற்றும் யாகூ யுனிக்கோடில்
தேடல்கள் செய்ய வல்லன. இது மாத்திரம் அன்றி மைக்குறோசொவ்ற்றானது
யுனிக்கோடின் ஊடாக தமிழ் விண்டோஸ் மொழி இடைமுகப் பதிப்பை Office 2003
மற்றும் Windows XP இற்கு அறிமுகம் செய்து. உலகில் உள்ள பல
மொழிகளையும் ஆதரிக்கும் இக்குறியீட்டு முறை இன்று மிகவும் பிரபலமடைந்து
வருகின்றது. |