யூனிகோட் குறியீட்டு தமிழ் (ஒருங்குறித்
தமிழ்) நமக்களிக்கப்பட்ட ஒரு
வரப்பிரசாதம்.
யூனிகோட் குறியீட்டு வெளிவந்தது
தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு நல்ல
செய்திதான். இதன் மூலம் தற்சமயம் தமிழ்
எழுத்துக்கள் ஒரு மாதிரியாகத்
தரப்படுத்தப்படுகிறது.
யூனிகோட் தமிழ் வாசகத்தை எந்த
இடங்களிடமிருந்தும் வெட்டி ஒட்டி
பயன்படுத்தலாம். இதை முன்பிருந்த பல்வகை
குறியீட்டு தமிழ் எழுத்துக்களைப்
பயன்படுத்திச் செய்யமுடியாமல் இருந்தது.
விண்டோஸ் இயக்கு தளம் எக்ஸ்பி லதா என்கிற
யூனிகோட் எழுத்துருவை தன்னுள்
கொண்டுள்ளதால் அந்த எழுத்துருவை
முன்பிருந்த எழுத்துருக்களைச் செய்தமாதிரி
தரவிறக்கம் செய்து நமது கணினியில் நிறுவ
வேண்டிய அவசியமில்லை. எந்த யூனிகோட்
குறியீட்டு தமிழ் எழுத்து இணையப்
பக்கங்களையும் என்கோடிங்கில் யூனிகோட்
என்பதை தேர்வு செய்து எந்த உலாவியிலும்
எந்த கணினியிலும் எங்கும் படிக்கமுடியும்.
யூனிகோட் குறியீட்டு எழுத்தை பிடிஎப்
கோப்பையாக மாற்றுவது வெகு சுலபம்.
ஆனால் யூனிகோட் குறியீட்டு தமிழில் இணைய
தள மின்னஞ்சல் கருவிகளான
ஹாட்மெயில் யாகூ மெயில் ஜீமெயில்
ஆகியவற்றில் தமிழில் எழுதுவதற்கு
குறள், ஏகலப்பை , அல்லது முரசு அஞ்சல்
போன்ற தமிழ் உட்புகுத்தி மென்பொருள்களைப்
பயன்படுத்தவேண்டிய அவசியம் இன்னும்
உள்ளது.
விண்டோஸ் 98 வைத்துள்ளோர் இண்டர்நெட்
எக்ஸ்புளோரர் 5.5 அல்லது அதற்கும்
மேம்படுத்தப்பட்ட உலாவியைப்
பயன்படுத்தினால் யூனிகோட் தமிழ்ப்
பக்கங்களைப் படிக்கலாம்.
லெட் இட் போன்ற சொற்தொகுப்பியைப்
பயன்படுத்தி யூனிகோட் தமிழில் எழுதலாம்.
பிறகு அதை வெட்டி ஒட்டி மின்னஞ்சல் வழியாக
தமது வாசகத்தை அனுப்பலாம்.
தமிழ் கூறும் நல்லுலகம் இந்த குறியீட்டு
முறை தமிழ் எழுத்துருக்களை தாமதம்
செய்யாமல் கடைபிடித்தார்களானால்
பயனுள்ளதாக தகவல் பரிமாற்றம் இலகுவாக
இருக்கும்
தமிழ் வாசகர்கள் யூனிகோட் அல்லாத மற்ற
தமிழ் எழுத்துருக்களை பயன்படுத்தும்
பதிப்பாளர்களுக்கு கடிதம் எழுதி அவர்களை
தங்களது குறியீட்டு முறையை மாற்றக்
கேட்டுக்கொள்ளவேண்டும். எழுத்துருக்களை
தரப்படுத்தியபின் நாம் பலதரப்பட்ட
தலைப்பில் தமிழ் எழுத்துக்களைப் படைத்து
தமிழிலுள்ள அறிவையும் தகவல்களையும்
வளர்க்க முயற்சிக்கவேண்டும்.
போதும் போதும் குழப்பமளிக்கும் பற்பல
எழுத்துரு வகைகள்!
தரப்படுத்தப்பட்ட யூனிகோட் குறியீட்டு
ஒன்றே நற்தமிழுக்கு நல்லது!