|
 |
|
       |
|
      |
|
|



|
|
உமர்தம்பி
அவர்கள்
சகோதரர் உமர் அவர்கள் தஞ்சை மாவட்டம்,
அதிராம்பட்டிணத்தில் அ..அப்துல் ஹமீது-ருக்யா (Rukkya) தம்பதிகளுக்கு 15.06.1953
அன்று ஒரு சகோதரர் மற்றும் மூன்று
சகோதரிகளுக்கு பின் ஐந்தாவதாக பிறந்தார்.
தனது ஆரம்பக் கல்வி மற்றும் மேல்நிலை
கல்வியினையும் அதிராம்பட்டிணத்திலேயே
முடித்தார்.தனது BSc (zoology) பட்ட
படிப்பினையும் அதிராம்பட்டிணத்தில் உள்ள
காதர் மொஹைதீன் கல்லூரியில் படித்தார்.
அதன் பின் Diploma in Electronics பட்டைய
படிப்பினையும் முடித்த அவர் தனது ஊரிலேயே
(அதிராம்பட்டிணத்திலேயே) 1983 ஆம் ஆண்டு
ஒரு வானொலி,தொலைக்காட்சி உபகரணங்கள் பழுது
நீக்கும் பணிமனை அமைத்து நிர்வகித்து
வந்துள்ளார். அதன் பிறகு 1984 ஆம் ஆண்டு
துபாயில் உள்ள Alfuttail Group of
Companies ல் எலக்ட்ரானிக்ஸ்
உபகரணங்களுக்கான (National Panasonic
service engineer) பழுது நீக்கும்
பொறியாளராக பணியில் சேர்ந்தார்.
உமர் அவர்களுக்கு கல்விபயிலும்
காலகட்டத்திலேயே 1977 ம் ஆண்டு ஏப்ரல்
மாதத்தில் திருமணம் நடைபெற்றது அவரது
மனைவியின் பெயர் பெளஷியா (Fouzia)
ஆகும்.இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
முறையாக எந்த கல்லூரியிலும் கணினி தொழில்
நுட்பத்தை பயிலாத உமர் அவர்கள், துபாயில்
பணிபுரிந்த காலங்களில் தனக்கு கிடைத்த
ஓய்வு நேரங்களைப் பயன்படுத்தி தானாகவே
தனக்கிருந்த ஆர்வத்தினாலும், முயற்சியாலுமே
கணினி தொழில்நுட்பங்களை கற்றுவந்துள்ளார்
என்பது ஆச்சரியப்படத்தக்க செய்தியாகும்.
துபாயில் தான் பணிபுரிந்துவந்த
நிறுவனத்தில் சில நாட்களிலேயே கணினிநுட்ப
வல்லுனரானார் . Network administrator,
SAP implementation team Head, Kiosk
programmer என கணினித் துறையில் திறம்பட
பணியாற்றிய அவர் 2001 மாவது ஆண்டு
செப்டம்பர் மாதம் தனது பணியிலிருந்து
ஓய்வுபெற்று தாயகம் திரும்பினார்.
தாயகம் திரும்பிய அவர் தனது ஊரிலிருந்து
கொண்டே தனது மூத்த மகன் மொய்னுதீனுடன்
இணைந்து சென்னை போன்ற பெருநகரங்களில்
இயங்கிவரும் மோட்டார் வாகனங்கள் மற்றும்
உதிரிப்பாகங்கள் விற்கும் (மாருதி கார்)
நிறுவனங்களுக்கு, பொருள் இருப்பு மற்றும்
விற்பனைக்கான மென்பொருட்களை
வடிவமைத்து கொடுத்து
பராமரித்துவந்துள்ளார்கள்.
சமூக சிந்தனையும், சமூக அக்கறையும் கொண்ட
திரு.உமர் அவர்கள் Baithulmal எனும்
சமுதாய சேவை செய்யும் அறக்கட்டளையில் ( ஏழை
எளிய மக்களுக்கு வட்டியில்லா
கடனளிப்பது,படிக்க வசதியில்லா
மாணவர்களுக்கு மேற்கொண்டு படிக்க நிதியுதவி
வழங்குவது, ஏழைப் பெண்களுக்கு திருமணங்கள்
நடத்திவைப்பது போன்ற நற்காரியங்களை இந்த
அறக்கட்டளை செய்து வருகிறது)முக்கிய
நிர்வாகியாக
இருந்து சேவை செய்துவந்துள்ளார்கள்.மேலும்
IMMAM SHAFI Matriculation School ல் ஆலோசனை வழங்கும் குழுவில்
முக்கியமானவராகவும் இருந்து வந்துள்ளார்.
புத்தகங்கள் படிப்பதில் மிக்க ஆர்வம்
கொண்டவர் திரு.உமர் அவர்கள் இலக்கியம்
அறிவியல்,பூகோளம்,புகைப்படக்கலை,கணினி,மருத்துவம்,என
இவர் படிக்காத நூல்களே இல்லை எனலாம்.
தனது கணினி அறிவினைக் கொண்டு தமிழ் இணைய
அகராதி, யூனிகோட் உருமாற்றி, தமிழ்
ஈமெயிலர்,தேனிவகை இயங்கு எழுத்துருக்கள்
மற்றும் RSS ஓடை போன்றவை உமர் தம்பி
அவர்களின் இலாப நோக்கற்ற தனிப்பட்ட
படைப்புகளாகும்.
உமர் தம்பி அவர்கள் 12.07.2006 ம் தேதி
தனது 53 ம் வயதில் மறைந்தார். அவரது இழப்பு
உலகத் தமிழர்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு
என்றால் மிகையில்லை. இணையத்தில் உலா வரும்
தமிழ் தளங்கள் மற்றும் தமிழ் மடல்கள்
அனைத்தும் ஒறுங்குறியில் அமையவேண்டும் என
கனவு கண்டவர் திரு.உமர் அவர்கள். அவர் கனவு
மெய்பட நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்
அதுவே நாம் அன்னாரின் ஆன்மாவுக்கு செய்யும்
அஞ்சலியாகும்.
தொகுப்பு: 'சங்கமம்' விசயகுமார்
|
|
|
 |
|
|