முதல்பக்கம்அறிமுகம்கவிச்சோலைகட்டுரைகள்சிறுகதைகள்படித்துச்சுவைத்தவைசைவமும் தமிழும்

குறளும் நிகழ்வும்கணினிக்கட்டுரைகள்மென்பொருள்யுனிகோட் கட்டுரைகள்நிகழ்வுகள்உங்கள் எண்ணங்கள்




 
இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகள் யாவும் திரு.சிங்கை கிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்டவை. இவற்றைத் தொகுத்து இங்கு தருவதில் பெருமகிழ்ச்சியடைகின்றது 'எழில்நிலா' வலைத்தளம்.

இக்கட்டுரைகள் பற்றிய உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க...
திரு.சிங்கை கிருஷ்ணன்
 

 
மகளிர் முத்தைப்போன்றவர்கள்

அழகிய ஓர் இளம் பெண் , இளைஞன் ஒருவனைக் காதலித்தாள்.
அவனும் அவளைக் காதலித்தான்.
ஆனால், அவர்கள் காதலை அப்பெண்ணின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதனால் ஒருநாள் அவர்கள் இருவரும் ஒருவரும் அறியாவண்ணம்
எங்கோ சென்றுவிட்டனர்;
தாய் அவளைத் தேடிப் புறப்பட்டாள்;
வழியில் வந்த சிலரைப் பார்த்து...,

''இந்த வழியில் ஒரு ஆண் மகனையும் , ஒரு பெண் மகளையும் கண்டீரா''
என வினவுகிறாள்.
அவர்களில் சிலர்... ...,
''தாயே ! உன் மகளையும் , அவள் காதலனையும் வழியில் கண்டோம்;
அவர் போக்கில் தவறு இல்லை என்பது மட்டுமன்று ;
அதுவே உலகியல் முறையாம் என் உணர்ந்து அவர்களைப் போக விடுத்தோம் ;
ஆகவே, அவர் குறித்துக் கவலைப் படாது , திரும்பி வீட்டிற்குச் செல்வாயாக'' என்றனர்.
'' வெவ்விடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர் ! இவ்விடை
என்மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்
தம்முளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்;
அன்னார் இருவரைக் காணிரோ ? பெரும !
காணேம் அல்லேம் ; கண்டனம் கடத்திடை ;
ஆண் எழில் அண்ணலோடு அருஞ்சுரம் முன்னிய
மான் இழை மடவரல் தாயிர் நீர் போறீர் ?
பலவுறு நாறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுள்ளே பிறப்பினும், மலைக்கு அவை தாம் என்ன செய்யும் ?

நினையுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அல்லதை
நீருள்ளே பிறப்பினும் நீர்க்கு அவை தாம் என் செய்யும் ?
தேருங்கால், நும் மகள் நுமக்கு ஆங்கு அனையளே;
ஏழ் புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுள்ளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என் செய்யும் ?
சூழுங்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே; என வாங்கு
சிறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்;
சிறந்தாளை வழிபடச் சென்றனள்;
அறந்தலை பிரியா ஆறும் மறு அதுவே ''

தாய்:
பெரியோர்களே! என் மகள் ஒருத்தியும் வேறு ஒருத்தியின் மகனும் பண்டு தமக்குத் தாமே காதல் கொண்டனர். அது இன்று பலராலும் அறிந்துக்கொள்ளப்பட்டது. அதனால் அவர்கள் இருவரும் ஒருமனப்பட்டு இனக்காட்டுவழியே வந்துவிட்டன; அவர்களைத் தாங்கள் கடந்து வந்த காட்டு வழியில் எங்கேனும் கண்டீர்களோ ? கண்டீராயின் கண்ட விதத்தை யான் அறியும் வண்ணம் கூறுங்கள்.

பெரியவர் : ஆ ணழகனாகிய அச்சிறந்தானோடு, கடத்தற்கரிய அ க்காட்டு வழியில்
செல்லத் துணிந்த, மாண்புமிக்க குணத்தைச் சிறந்த அணியாகக் கருதிய மடப்பம் மிக்க
அவ்விளையோளைப் பெற்ற பெருமை வாய்ந்த தாயே ! நீ கூறிய அவ்விருவரையும் காட்டு
வழியில் பார்த்தோம்.

தாயே ! பற்பல வகையிலும் பயன்படுத்தப்படும் நறுமணம் மிக்க சந்தனக் கட்டை
மலையில் தான் வளர்கிறது; ஆனால், அது அங்கு வளர்ந்தாலும், அது தன்னை அறைத்துப்
பூசிக் கொள்பவர்க்குப் பயன்படுவதல்லது, பிறந்த மலைக்கு எந்த வகையிலும் பயன்படுவதில்லை.

நினைத்துப் பார்த்தால் உன் மகளுக்கும் உனக்கும் உள்ள உறவு அத்தகையதே.
தாயே ! தலைசிறந்த வெண்முத்துக்கள் கடல் நீரில்தான் பிறக்கின்றன; ஆனால், அவை
அங்கே பிறப்பினும் அவை, தம்மை ஆ ரம் ஆ க்கி அணிந்து கொள்பவர்க்கு அழகு தருவதல்லது, தாம் பிறந்த கடலுக்கு எந்த வகையிலும் அழகு தருவதில்லை. ஆராய்ந்து பார்த்தால், உன் மகளுக்கும் உனக்கும் உள்ள உறவும் அத்தகையதே.

தாயே! எழுவகையாக எழும் இனிய இசை, யாழில்தான் தோன்றுகிறது; ஆனால், அது
தன்னை கேட்டு நுகர்வார்க்கு இன்பம் தருவதல்லது. தான் தோன்றிய யாழிற்கு எந்த வகையிலும் இன்பம் தருவதில்லை; ஆராய்ந்து நோக்கினால் உன் மகளுக்கும் உனக்கும்
உள்ள உறவு அத்தகையதே.
ஆகவே, தாயே ! சிறந்த கற்பு தெறியை மேற்கொண்டவளாய் காதலனோடு காட்டு
வழியில் போய்விட்ட உன்மகள் குறித்து வருந்தாதே; அவள் தலைசிறந்த ஒருவனைத் தன்
கணவனாக ஏற்றுச் சென்றுள்ளாள்; அது மட்டுமன்று, அவள் செயல் உலகியல் அறத்தோடு
ஒட்டியது ஆகும்.