இலக்கியத்தில்
நரை
நரைக்குக் காரணம் மரபு கூறுதான். சிலருக்கு மிக இள வயதிலேயே வந்து
விடுகிறது.
ஆனால் மிகுந்த கவலை கொண்டால் முடி நரைத்து விடும் என்ற நம்பிக்கை பலருக்கு
உண்டு. கவலை என்பதும் (STRESS) தானே. இந்த மன உளைச்சல்
Stress உடலில் பல மாறுதல்களை ஏற்படுத்தகூடியதான்
ஆனால் இது நரை எப்படி ஏற்படுத்துகிறது என்று விஞ்ஞான ரீதியில் விளக்க
இயலாது
என்றாலும், மயிர்க்கால்களில் கருமை நிறம் தரும் இரசாயனம் Melanin Pigments
களின்
செயல்பாடுகளில் பலவீனம்தான் இந்த நரையை ஏற்படுத்துகிறது என்கிறார்கள்
மருத்துவர்கள்.
ஒரு சங்ககால பாடல் நினைவுக்கு வருகிறது. பிசிராந்தையர் என்றொரு புலவர்.
அவருக்கு வயதாகியும் கொஞ்சமும் நரைக்காமல் கரு கருவென்று கருப்பாக
இருந்திருக்கிறது. அவரை நோக்கி பலரும் எப்படி இப்படி நரையின்றி
இருக்கின்றீர்கள்
என்று கேட்டிருக்கின்றனர்.
பிசிராந்தையார் கூறுகின்றார்:
''யாண்டுபல வாக நரையில் ஆகுதல்
யாங்கு ஆகியர்? என வினவுதிர்; ஆயின்
மாண்ட என் மனைவியோடு மக்களும்
நம்பினர்; யான்கண் டனையர் என்
இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான், காக்கும்
அதன் தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் வாழும் ஊரே''
- புறநானூறு -
மிக எளிமையான பாடல். ஒரு முறை வாசித்தாலே புலவர் நம்மோடு நேரிடையாக
பேசுவதுபோல் தோன்றும்.
'' மாண்ட என் மனைவி '' என்றால் மாட்சியுடையவள் என் மனைவி என்று பொருள்.
மனைவியோ மாட்சியுடைவள், என் மக்களோ அறிவு நிரம்பியவர்கள். என் இளையரும்
நான் எப்படி விஷயங்களைப் பார்க்கின்றேனோ அதே போன்று எதனையும் காணும்
இயல்பினர். அதாவது நான் ஒன்று சொல்ல, அவர்கள் வேறொன்று செய்து எனக்குப்
பிரச்சனை தர மாட்டார்கள். மிக முக்கியமானது என் அரசன் அறம் அல்லாதவற்றை
செய்ய மாட்டான். முறையாக எங்களைக் காக்கின்றான். இவை எல்லாவற்றிலும்
மேலாக என்னோடு எங்கள் ஊரில் வாழும் மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று
நினைக்கின்றீர்கள். '' அன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் ''
பலர் வாழும் எங்கள் ஊர். அதாவது மேலான கல்வியால் நிறைந்து, அதற்கேற்பப்
புலனுணர்வுகளை அவித்து வாழும் சான்றோர்கள் நிறைந்த ஊரில் வாழ்வதாக
கூறுகிறார்.
நமக்கே பொறாமையாக இருக்கிறதல்லவா?
தனக்கு கவலையற்ற வாழ்க்கை அமைந்திருக்கின்றது. தன்னை ஆளும் அரசன் பாண்டியன்
அறிவுடை நம்பி ஒரு உத்தமன் என்பதை இப்படி வளைத்துச் சொல்கிறார்.
நம்மால் இப்படி சொல்ல முடியுமா?
நமக்கெல்லாம் நரைக்காமல் என்ன செய்யும். |