| |
|
|
 |
| |
14.
நன்றியுரை, வாழ்த்துக்கள், வணக்கம் |
|
| |
விழாக்குழுவின் சார்பில் கவிஞர் நம்பி நன்றியுரை
நிகழ்த்துவார்
மணியம்
*
தமிழ் உலக மேடைபோட்டு
தரணி எங்கும் பந்தல் போட்டு
இணையத்தில் நடக்குது விழா
நினைவெல்லாம் நிறையுது அவா
சந்திரனை பிடித்து வைத்து
சூரியனை உதிக்க வைத்து
வின்மீனை ஒட்டி வைத்து
விழாக்கோலம் பூண்டிருக்கு
புன்முறுவலோடு தலைமை ஏற்ற
மாலனுக்கு சிறப்பு நன்றி.
வாழ்த்துரைத்த சான்றோர்க்கு
உளங்கனிந்த அன்பு நன்றி
ஓடியாடி உழைத்திட்ட
தமிழுலக மக்களுக்கு அன்பு நன்றி
வந்திருந்து சிறப்பித்த மக்களுக்கு
வாயார நன்றி சொல்லி
விடை பெறுகிறேன்.
அன்புடன்
நம்பி.
*
அன்பினிய மணியம் வாங்க விழாவின் இறுதி நாயகராக
எல்லோரின் சார்பிலும் நன்றியுரைக்க வாருங்கள்,
(சற்று மெல்லிய குரலில் ஏம்ப்பா... தேசிய கீதம் பாட ரெடியா இருங்க....)
ஆல்பர்ட்
அன்பினிய தமிழ் உலக நண்பர்களே!
வணக்கம்.
பழனி அவர்கள் இருந்து ஆற்ற வேண்டிய நன்றியுரையை நான் நிகழ்த்தவேண்டியது
காலத்தின் கட்டாயமாகிவிட்டது.
தமிழ் உலக இணையவெளிப் பந்தலில், இணையத்தில் முதல் கவிதை நூல் வெளியீட்டு
விழா! வெகுவிமரிசையாக கடந்த ஒருவாரமாக இரவும் பகலும், பகலும் இரவுமாக
நடந்து ஒரு புதிய வரலாறைப் படைத்திருக்கிறோம்.
இந்த முதல் விழா, நமது ஆஸ்தானக் கவிஞருக்கே விழா எடுத்ததும் மிகப்
பெருமையான ஒன்று என்பதில் எள்ளளவும் அய்யமில்லை. உலகெங்கும் இந்த
விழாவை விழிகளில் நிறைத்துப் பார்த்தார்கள்; பரவசப்பட்டார்கள்.
வியந்தார்கள்;
இந்த வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போய்விட்டதே என்று கூட சிலர்
எங்களுக்குத் தூது விட்டனர். அவர்களுக்கும் உரிய நேரத்தில் விழா எடுக்க
தமிழ் உலகம் முன்வரும் என்று மட்டும் இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள
ஆசைப்படுகிறேன்.
இந்த இனிய விழாவிற்கு பல்வேறு பணிப்பளுவிற்கும் இடையே தலைமைதாங்கி
சிறப்பாக நடத்தித் தந்த மாலன் அவர்களுக்கும், முன்னிலை வகித்த நண்பர்
லண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் சிவா பிள்ளை அவர்களுக்கும்,
வாழ்த்துரை நல்கிய மும்பைக் கவிஞர்.மாதவி, கவிமாமணி.இலந்தை இராமசாமி,
கவிஞர்.சேவியர்,கவிஞர்.கற்பகம், கவிஞர் ஆசாத், கவிஞர்.சாபு,
கவிஞர்.முத்துநிலவன், அய்யா இராமகி, எழுத்தாளர்.ஜெயந்தி சங்கர்
ஆகியோருக்கும்,
விழாவிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய கவிக்கோ.அப்துல்ரகுமான்,
கவிஞர்.இக்பால், கவிஞர்.யோகியார் வேதம் மற்றும் ரங்கராஜன் மற்றும்
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக உரைநிகழ்த்திய முனைவர்
அனந்தநாராயணன், முனைவர்.பசுபதி, கவிஞர்.மதுமிதா,எழுத்தாளர்.பிரகாஷ்,
ஆசிப் மீரான், மரு.சுவாமிநாதன், நாக.இளங்கோவன் மற்றும் விழாவிற்கு
உறுதுணையாக இருந்து விழாவைத் திறம்பட நடத்திச் சென்ற விழாக்குழு
உறுப்பினர்கள் இராமசந்திரன் உஷா, பாரத், அன்பு, பாண்டியன், கவிஞர்
நம்பி ஆகியோருக்கும்,
பொற்கிழி வழங்கி புகாரியைக் கெளரவித்த எழில் நிலா மகேன் ஆகியோருக்கும்
இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு அவசரப் பயணமாக
ஆஸ்திரேலியா சென்ற மட்டுறுத்துனர் பழனி, விழாவினை ஒருங்கிணைத்து
என்னோடு நடத்திய மட்டுறுத்துனர் ஆல்பர்ட் ஆகியோருக்கும் விழாவில்
வாழ்த்துச் செய்திகளை வாசித்தளித்த கவிஞர்.உதய செல்வி ஆகியோருக்கும்
விழாவில் பங்கு கொண்டு சிறப்பித்த வாசன் பிள்ளை, குமார் குமரப்பன்,
புஸ்பா கிறிஸ்றி, கலைமணி, ஆங்காங் மரு.பிலிப், கீதா மற்றும் தமிழ் உலக
உறுப்பினர்களுக்கும்
இன்னும் பெயர் குறிப்பிடமால் ஒத்துழைத்த அனைவருக்கும் தமிழ் உலகம்
சார்பிலும் ஏற்புரை நிகழ்த்திய அன்புக் கவிஞர்.புகாரி அவர்களுக்கும்
(பெயர்கள் ஏதும் விடுபட்டிருந்தால் அருள் கூர்ந்து
மன்னிக்கவும்),விழாவில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பலகுரல் மன்னனாக
வந்து விழாவை கலகலக்க வைத்த இளைஞருக்கும். நன்றியை தெரிவித்து
விடைபெறுகிறேன்.
நன்றி.
வணக்கம்.
மணியம்
*
இணையம் என்னும் அரங்கில் அன்புடன் இதயம் நூல் வெளியீட்டு விழாவிற்கு
இணைந்த என் தமிழ் இதயங்களுக்கு முதல் வணக்கம்.
அமீரகத்தில் இருந்து வரவேற்புரையாற்றி அமர்ந்திருக்கும் என் உடன்பிறவா
சகோதரன் அன்பு அவர்களுக்கும்
தலைமை தாங்கி இவ்விழாவை சிறப்பாக நடத்தித் தந்த அன்பிற்கினிய அண்ணன்
திரு. மாலன் அவர்களுக்கும்
தாயகத்திலிருந்து வந்து இந்நூலை வெளியீட்டு சிறப்புரை ஆற்றிய என்
அன்புச்சகோதரி புதிய மாதவிக்கும்,
கவிஞனை வாழ்த்த பல திசைகளிலிருந்து வந்து வாழ்த்துக் கவிகளை தூவி
விட்டுச் சென்ற கவிஞர் பெருமக்களுக்கும்
இவ்விழாவிற்காக தன் குடும்பங்களோடு வந்து விழாவை சிறப்பித்த எனது
சொந்தக்கார்களாகிய உங்கள் அனைவருக்கும் இவ்விழாக்குழுவின் சார்பாக
நெஞ்சார்ந்த நன்றியினை இந்நேரத்தில் சமர்ப்பிக்கின்றேன்.
என் அன்புச் சகோதரன் புகாரி அவர்களை இந்த தமிழ் சமுதாயமே வாழ்த்தும் போது
ஓரத்தில் நின்று என் கண்களில் வந்த ஆனந்த கண்ணீரை அடக்க முடியாமல்....
(பலத்த கரவோசங்கள்..... அவர்களுடன் நானும்...
டொக்...டொக்...டொக்...டொக்...டொக்...டொக்...டொக்...டொக்...டொக்...டொக்...டொக்...
டொக்...டொக்...டொக்...டொக்...டொக்...டொக்...டொக்...டொக்...டொக்...டொக்...டொக்...
டொக்...டொக்...டொக்...டொக்...டொக்...டொக்...டொக்...டொக்...டொக்...டொக்...டொக்...
டொக்...டொக்...டொக்...டொக்...டொக்...டொக்...டொக்...டொக்...டொக்...டொக்...டொக்...டொக்...)
தோளோடு தோள் நின்று இவ்விழாவினைச் சிறப்பாக நடத்த இரவு, பகல் பாராது
உழைத்த எல்லா நண்பர்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
சாபு, அன்பு, ஆசிப் என்ன நிக்கிரீங்க விழா முடிஞ்சிச்சு.. நம்ம
எல்லோருடைய பயணச்சீட்டும் உறுதியாயிடுச்சு.. சாயங்காலமா கிளம்பினா
போதும். இருக்குற நேரத்துல வாங்க இப்படியே நம்ம தமிழுலகத்தை ஒரு சுத்து
சுத்திவருவோம்.
என்ன பாண்டியரே என்னாச்சு.. அய்யா உங்களுடைய பயணச்சீட்ட அண்ணன்
இளங்கோகிட்ட கேளுங்க, அண்ணன் கிட்டதான் நான் தாயகம் செல்வோருக்கான
சீட்ட கொடுத்தேன்.
கனடா போரவுங்களுக்கு எல்லாம் புகாரி அண்ணன் கிட்டயே பயணச்சீட்டு இருக்கு,
சிங்கப்பூர், மலேசியா மற்ற ஆசிய நாடுகளில் இருந்து வந்த நண்பர்கள்
எல்லாருடைய பயணச்சீட்டும் நம்ம மணியம் அண்ணன்கிட்டயும், அமெரிக்கா
மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான பயணச்சீட்ட ஆல்பர்ட் அண்ணன்கிட்டயும்,
வேற யாருக்காவது சீட்டு கிடைக்கலைனா நம்ம நம்பிகிட்ட கேளுங்க..
என்ன நண்பர்களே புரிஞ்சுதா.......... நாம எல்லோரும் அடுத்த விழாவில
சந்திப்போம்..................
(போகின்ற வழியில் நான் அன்பு அண்ணன் கூட பேசிகிட்டே போகின்றேன்)
அன்புண்ணா உடம்பெல்லாம் வலிக்குது போய் நல்ல ஒரு குளிய போட்டுட்டு இரண்டு
நாளைக்கு தூங்கனும்...........
இதைப்போல அப்பப்ப விழா எதாவது வந்தாதன் நாம நம்ம மக்கள பார்க்க
முடியுது.. பாருங்க நம்ம யாரும் யாரையும் பார்த்தது ஒவ்வொருத்தரையும்
பார்த்து, பேசும் போது போது மனசுக்கு ரொம்ப சந்தோசம இருந்ததுண்ணா..
பாரத்
துபாய்
நன்றி
அன்புடன்
பாரத்
*
என்னப்பா! எல்லாம் செட்டில் செஞ்சாச்சா?
அது எல்லாம் பேசினதுக்கு மேலையே கொடுத்துட்டாங்க.
ஆனா.....
என்னபா, ஆனான்னு இழுக்கறே! எதுனாச்சும் பிரச்சனையா?
அதெல்லாம் இல்ல... வந்து ...சந்தேகம்
என்ன சந்தேகம்?
பார்த்த பெரி மன்ஷாளுங்க மாதிரி இருக்காங்க, ஆனா தமில்ல பேசுறீங்க, நம்ம
ஆளுங்க விளான்னா இங்கீலீஸ்ல தானே பேசுவாங்க,அல்லாட்டி தமில்ல இங்கிலீஸ்
கலந்து தானே பேசுவாங்க? என் சர்வீஸ்ல இது மாதிரி தமில்ல பேசுன விளாவ நா
பார்த்ததே இல்ல
அடுத்த சந்தேகம், ஒரு விளான்னா சண்ட சச்சரவு வராம எப்டி? அவுங்க, அவுங்க
வாராங்க. அழகா பேசிட்டு போறாங்க. அல்லாரும் சிரிச்ச மூஞ்சியா
இருக்காங்க!
என்னய்யா! கண்ணு போடரே?
சரியா சொன்னீங்க! மொதல்ல பெரிய திருஷ்டி கழிக்கணும். எங் கண்ணே பட்டுடும்
போல இருக்கு!
என் செலவுல பூசினிகாய் வாங்கியாந்திருக்கேன்.
கவிஞர நடுல நிக்கவெச்சி நீங்க அல்லாரும் சேர்ந்து நில்லுங்க!
ஆஹ, அப்படிதான்!
இது போல இன்னும் ஒத்துமையா பல நூறு விழாக்களை நடத்த வாழ்த்துகிறேன்.
அட! கண்டிராக்டரு நல்ல தமிழ்ல பேசுறாரே!
ஒரு வாரமா நல்லதமிழ் தானே காதில் விழுகிறது. வரட்டா,
கவிஞரே, உங்க கவிதை புத்தகம் எனக்கு ஒண்ணு!
அடுத்த விழாவுக்கு என்னையே கூப்பிடணும். மறந்துடாதீங்க!
கண்டிராக்டர் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு சந்தோஷமாய்
செல்கிறார்.
உஷா
*
usha wrote:
>என்னப்பா! எல்லாம் செட்டில் செஞ்சாச்சா?
>
"உலகத்தில எங்கெங்கோ போய் இருந்தாலும், ஏதாவது தேவைன்னா வந்து நம்ம ஆளுக
ஒன்னா சேந்திடுறாங்கப்பா.."
என்று எல்லோரும் சொல்லிக்கொண்டு போவது காதில் விழுகிறது.. கடைசி கட்ட
புகைப்பட ஒளி வெள்ளத்தில் இருந்த மீண்ட கவிஞரின் முகத்தில் களைப்பு
தென்படுகிறது... பாவம்.. கொஞ்சம் ஆரஞ்சு பழச்சாறு கொடுத்து போகச்
சொல்லுங்க..
போறது போறீங்க.. நம்ம வீட்டுல வந்து ஒரு வேளை கை நனைச்சுட்டு போங்க..
இன்னொரு விழாவிற்கு வந்தேன்னா, எனக்கும் தமிழ் ஒழுங்கா பேச வந்திடும்னு
நினைக்கிறேன். அவ்ளோ அழகா எல்லாரும் பேசுறீங்க.. (அதை அப்டியே அவங்க
அவங்க குழந்தைகளுக்கும் கத்துக்குடுத்துடுங்க)
அன்பின் தழுவலுக்கு நன்றி கூறும்
பாண்டியன்
(இது என்ன விழா... விழா நாயகருக்குத்தான் பட்டம் தருவாங்க.. இங்கே வேலை
பாத்தவங்களுக்கு விழா நாயகர் பட்டம் தாராரு!! ஒரே ஜோர்தான் போங்க..)
*
அன்பு நண்பர்களுக்கு
முதன் முறையாக இணையதளத்திலே ஒரு புத்தக வெளியீட்டு விழா....
இவ்விழாவிற்கு இங்கு கடல் அலையென திரண்டிருக்கும் தமிழ் நெஞ்சங்களே,
அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்.
உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் தமிழ் விழா, தமிழன் விழா என்ற
எண்ணத்தோடு ஒவ்வொருவரும் அவரவர்க்குரிய பங்கினை சிறப்புற செய்ததால்தான்
இந்த 'அன்புடன் இதயம்' நூல் வெளியீட்டு விழா இத்தகைய வெற்றியினை
பெற்றுள்ளது என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்காது.
மணிமகுடத்தில் பதித்த வைரமாய் அத்துனை அலுவல்களுக்கு மத்தியிலும்
தமிழின்பால் கொண்டுள்ள பாசத்தின் பாங்கினை வெளிப்படுத்த நல்ல ஒரு
தருணம் என்றெண்ணி இவ்விழாவினை தலைமையேற்று அழகுற நடத்தி தந்த மாலன்,
அன்புடன் இதயத்தை வெளியிட்டு அழகு தமிழிலில் வாழ்த்துரை வழங்கிய மாதவி,
முன்னிலை வகித்து விழாவினை முன்னிற்கு இட்டுசென்ற பேராசிரியர்
சிவாபிள்ளை போன்ற சான்றோர்களுக்கு இவ்விழா வெற்றியினை நன்றியாக
விழாக்குழுவினரின் சார்பிலும் கவிஞர் புகாரி அவர்களின் சார்பிலும்
சமர்பிக்கிறேன்.
இந்த இனிய விழாவிற்கு எதிர்பராத விருந்தினராய் வந்து நம்மையெல்லாம் அழையா
விருந்தாளியாக வந்தாலும் அனைவரது மனதிலும் அழுத்தமாக இடம்பெற்று புயல்
என்றாலும் தென்றலாய் வருடிச்சென்ற வைகோ அவர்களுக்கும், ஒப்பற்ற
வரிகளால் மட்டுமின்றி அன்புடன் இதயத்தின் ஒவ்வொரு வரிகளையும் தாலாட்டி
சென்ற இளங்கோ, சாபு, மணியன், இளங்கவி ஆசாத், ஜெயந்தி, கற்பகம், முத்து
நிலவன், மதுமிதா, கீதா, எழில் நிலா மகேன், குமார் குமரப்பன், வாசன்
பிள்ளை, ஐயா ஞானவெட்டியான், நம்பி, குடும்பத்துயரிலும் விழாவில் கலந்து
கொண்ட பிரகா0, ஆசீப்மீரான்,தோழர் தியாகு இன்னும் எண்ணற்ற
கவியுள்ளங்களுக்கு எவ்விதம் நன்றி நவில்வது? ஒவ்வொருவருமே அவரவர்
வீட்டு நிகழ்வாக இதை எண்ணியதால் வந்த குழப்பம்தான் இது? இருப்பினும்
அந்த அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் விழாக்குழுவினரின் மனமார்ந்த
நன்றிகள்.
இதெல்லாம் இருக்கட்டும் இப்படி ஒரு விழாவினை வெற்றியடைய செய்ய
வேண்டுமெனில் ஓடியாடி உழைத்த நல்ல உள்ளங்கள் இருக்குமல்லவா? ஆம் பாரத்,
பாண்டியன் .போன்ற உழைத்த களைத்த உள்ளங்களுக்கும் எங்களின் நன்றிகள்.
கோவில் என்றால் மூலவர் இல்லாமலா? இணைய தளத்திலேயே புத்தக வெளியீட்டு விழா
நடத்திடலாமே என்ற எண்ணம் படைத்து அதனை திறம்பட செயல்படுத்தி வெற்றியடைய
செய்த விழா மூலவருக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டுமல்லவா? அவ்வழியில்
இவ்விழாவினை திறம்பட நடத்தி களைப்புடன் இருக்கும் ஆல்பர்ட்
அவர்களுக்கும் இதயம் நிறைந்த நன்றிகளை இவ்விழாக்குழுவின் சார்பில்
தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் இவ்விழா வெற்றியடைய உழைத்த அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும்,
பெருந்திரளாக இவ்விழாவில் கலந்து கொண்டு தமிழமுதம் பருகிய உலகின்
அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் இவ்விழாக்குழுவினரின் சார்பில்
மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டு அன்போடு விடைபெறுகிறேன்.
வாழ்க தமிழ்!
தொடர்க கவிஞர் புகாரியின் தமிழ்ப்பணி!!
நன்றி வணக்கம்.
அன்புடன்,
அன்பு.
*
வணக்கம்
மழைவிட்டும் தூவானம் போகவில்லை!!!
அயராது உழைத்து
அதுவும் இத்தனை நாட்கள் தொடர்ந்து
விழாவைச் சிறப்பாக நடத்தியமைக்கு
விழாவின் உறுப்பினர்களுக்கு - குறிப்பாக நண்பர் ஆல்பர்ட்,
விழாவின் நாயகனுக்கும் மீண்டும் நன்றிகள்
>*** சகோதரி மும்பை மாதவி ***
வாழ்த்துகள்
அன்புச் சகோதரிக்கும்
நடுங்கும் பனியிலிருந்து
அன்புடன்
திரு |
|
| |
'எழில்
நிலா'வின் சிறப்புப்பக்கம் |
 |
|
|