| |
|
|
 |
| |
4.
விருந்தோம்பல், வாழ்த்துக்கள் |
|
| |
விருந்தோம்பல்:
பாரத், துபாய்
அண்ணே வந்துட்டேன் வந்துட்டேன், தாமதமா வந்ததிற்கு மன்னிக்கவும்.. என்ன
செய்ய ஒரே போக்குவரத்து நெரிசலில் சிக்கி விழா நடக்கிற இடத்திற்கு வர
கொஞ்சம் தாமதமாகிவிட்டது.
அய்யா பாண்டியரே. அங்க பாருங்க நம்ம கூட்டத்தை அண்ணன் ஞானவெட்டியான்,
அண்ணன் முத்து நிலவன், அண்ணன் இளங்கோ, அண்ணன் சந்திரபோஸ், அண்ணன்.
இராமகி எல்லோரும் நிக்கராங்க அவுங்களுக்கா நாம முன்பதிவு செய்திருக்கோமே
அந்த இருக்கைக்கு அழைத்து கொண்டு போங்க..
அன்பு அண்ணே வரவேற்புரை முடிஞ்சதும் நீங்க அரங்கத்தின் வாயிலுக்குச்
சென்று சந்தனம் கொடுங்க அண்ணா..

உபசரிப்பு: பாண்டியன்
இணையத்துல வந்தாலும் போக்குவரத்து தொல்லை விடலியா.. காலையில தாமதமா
எழுந்தேன் அப்டின்னு ஒத்துக்கங்க.. (எத்தனை பேர் காதில இது மாதிரி
நாங்க பூ சுத்திருப்போம்!!). விழா நல்லபடியா முடியட்டும்.. உங்களை
பாத்துகிறேன்..
ஐயா எல்லாருக்கும் வணக்கம்.. ஒரே ஊர்ல இருந்தாலும் நானும் ஐயா
முத்துநிலவனும் ஒன்னா வரவே மாட்டோம் போல இருக்கு!! இளங்கோ அண்ணா நல்லா
இருக்கீங்களா? திருவாரூர்ல பாத்தது.. போஸ் ஐயா வணக்கம்.. என்ன....???
நீங்க இராமகி ஐயாவா.. மன்னிக்கனும்.. கொஞ்சம் சொதப்பிட்டேன்..
கோவிக்காதீங்க.. போஸ் ஐயா.. ஏ சி பொட்டி பக்கத்துல உங்களுக்கு நாற்காலி
போட்டிருக்கோம்.. குளிர் ஒன்னும் பிரச்சனை இல்லையே. உங்களுக்கு குளிர
வாய்ப்பே இல்லை. பக்கத்துல தான் இளங்கோ அண்ணா இருக்காரே..
அது சரி.. நிகழ்ச்சிய யார் தொகுத்து வழங்குவது..?
பாண்டியன்

--வாழ்த்து: மதுமிதா, தமிழ்நாடு
புகாரிக்கு வாழ்த்துக்களுடன்...
அன்புடன் இதயம்
அன்பான இதயத்துடன் புகாரி அருமையான கவிதைகளை அள்ளி அள்ளி
அளித்திருக்கிறார்.
1 மனசுக்குள் எழுகின்ற
உணர்வு - தமிழ்
உணர்வினுள் கசிகின்ற
மனசு
மூச்சுக்குள் உள்ளாடும்
தாகம் - தமிழ்
தாகத்தில் தீயாகும்
மூச்சு
ஆஹா! தமிழின் மீதான நேசம் தமிழையே நேசிக்கச் செய்யும் தமிழுக்கு ஒரு
அற்புதகவி இங்கே. வாழ்க தமிழ்! வளர்க புகாரி!
2 மென்மையும் உண்மையும்
குழைத்துக்கட்டிய
சிம்மாசனத்தில் வீற்றிருந்த
என்னையுமல்லவா இழந்துவிட்டேன்
ஆம்
நீ வேண்டாம் இன்றெனக்கு
மீண்டும்
நான்தான் வேண்டும் எனக்கு
அன்பின் சிதைவிற்கு ஆட்பட்டாலும் தன் நிலை மறவா மனம் வேண்டும் மீண்டும்
மீண்டு எழ வேண்டும். உன்னத மனோபாவம்.
7 மரணத்தின் முத்தச் சத்தம்
காதுக்குள் கேட்கும் போதும்
அகலாத முயற்சி வேண்டும்
அயராத உழைப்பு வேண்டும் - தோழா
வெற்றி உன் காலடி முட்டும்
கண்களின் அருவியை நிறுத்த கனலாய் எழுந்த கவிதை கவலையை அழிக்க என்றும்
கனன்று கொண்டிருக்கும்
9 கெடுப்பவன் என்றும் கெட்டே சாகின்றான்
கொடுப்பவன் தானே சரித்திரம் ஆகின்றான்
அடுப்பினை எரிக்க அவசரப் போர்வேண்டும்
அத்தனை மாந்தரும் உண்கிற நிலைவேண்டும்
போரை நிறுத்துவதற்காக கவிதை. அதில் தனியருவனுக்குணவில்லையெனில் ஜெகத்தினை
அழித்திடுவோம் பாரதியின் பாடலின் உணர்வு அவசரப் போர் அடுப்பினை எரிக்க.
கொடுப்பதில் இன்பம் மட்டுமல்ல சரித்திரம் ஆளும் உண்மையும்.
11 தண்ணீரின் கூறுகளாய்
உலகெங்கும் உயிரினங்கள்
தண்ணீரே இல்லையெனில்
வியாபிக்கும் வெற்றிடங்கள்
12 நிலமும் தின்னும் நீரும் தின்னும்
வெளியும் தின்னும் காற்றும் தின்னும்
நெருப்பே மூலம் பசியின் உருவம்
நெருப்பின் விசையே யாவும் எங்கும்
13 கட்டி இழுக்கும் கயிறும் இல்லை
கடந்து செல்லும் சாலை இல்லை
கையை நீட்டி வழியைச் சொல்லும்
கடமைப் பணியில் எவரும் இல்லை
14 உதடுகள் தொட்டு ஒத்தட முத்தம்
ஓசைகள் இன்றி ஒத்துவதாரு
செவிகள் தொட்டு நித்தமும் கீதம்
சுரங்கள் சேர்த்துப் பாடுவதாரு
15 வானம் நிறைத்து விரிந்தே கிடக்கும்
வெற்றுப் பெருவெளி யாவும் இருட்டே
வானம் என்பதும் வையம் என்பதும்
அண்டம் என்பதும் எல்லாம் இருட்டே
பஞ்ச பூதங்களின் வர்ணனைகள் படித்து படித்து இன்புற வேண்டும் வஞ்சக மனம்
கூட வாஞ்சை கொள்ளும் வடித்து வடித்து வார்த்தைகள் கோர்த்ததால்.
19 எனக்குக் கணினி வேண்டாம்
உன் மடிதான் வேண்டும்
அமெரிக்கா வேண்டாம்
அப்பாதான் வேண்டும்
இதை விடவும் உறவின் மகிமையை உள்ளது உள்ளபடி உணர்வு பூர்வமாய் உண்மையாய்
சொல்ல இயலுமா?
20 ஒரு பனித்துளி
தென்னிந்திய
புழுதிப் புல்வெளியிலிருந்து
உயரே உயரே எழுந்து எழுந்து
ஆதவ நெற்றியில்
அழகு முத்தம் தந்த
சரிதையோ உன் சரிதை
குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் குடியேறி விட்டார் மக்களின் இதயங்களில்
வையகம் போற்ற பிறந்த அவரை வைர வரிகளில் வாழ்த்திய புகாரி ! கவிஞனே !
புகழோடு வாழ்வாய் !
24 நான்
எத்தனையோ தூரமாய்
ஓடி ஓடிப் போனாலும்
என்னை
இழுத்து இழுத்து
உன் நினைவு வனத்திலேயே
கொண்டுவந்து விடும்
.....
என்னால்
விரட்டவே முடியாத
விசித்திரங்களாகி விட்டனவே
நான் என்ன செய்ய
காதல் வசப்பட்ட மனம் கடந்த காலங்கள் கடந்தாலும் வரும் காலங்கள்
பிறந்தாலும் வழங்கிக் கொண்டுதான் இருக்கும் விசித்திரங்களை. காதல் தன்
வசமான அனைவருக்கும் அப்பேற்பட்ட விசித்திரங்களை அள்ளி அளிக்கும்
கூடையாய் இருப்பதால்
25 மைவற்றா தூரிகையும்
உனக்கொரு விரல்தானே
கண்ணதாசன் வரிசையில் கவிகள் ஆயிரம் கண்கள் கலங்க கவிபாடிய கவிஞனே நீண்ட
அவ்வரிசையில் நீயும் முதல் வாழ்த்து பெறுவாய்.
26 தமிழினி
மெல்லச் சாவதோ
தீப்பொறி தீர்ந்தே போவதோ
விழிகளை
விரித்தே காண்பீர்
வெற்றியின் நெற்றியில் தமிழே
தமிழை வாசிக்கும் தமிழை நேசிக்கும் தமிழை சுவாசிக்கும் தமிழ் நேயனே
தமிழில் நீங்கா இடம் பெறுவாய்
27 அரியானாப் பெண்ணின்
ஆகாய வெற்றி
இந்தியத் தலையில்
இன்னுமொரு மகுடம்
மகுடத்தின் கொடிகள்
அரைக்கம்பம் பறக்க
மறைந்தாயே தோழி
முக்காலும் வாழி
அந்த ஏழு வீரர்களுக்கான பாடலில் கல்பனா சாவ்லாவின் கனவுகளை மெய்ப்பிக்க
மேலும் பல இந்திய உயிர்கள் உயிர் பெறட்டும்.
29 மண்ணே புகலிடமே - என்றன்
மற்றோர் தாய்மடியே
உன்னை நினைக்கயிலே - நன்றி
ஊற்றே உயிர்தனிலே
மனம் கலங்கிய மனிதர்களுக்கு புது வாழ்க்கை காட்டும் மற்றோர் தாய்மடிக்கு
மனம் நிறைந்த நன்றிகள்
அன்புடன் இதயம் , எழுதப்படாத கடிதம் இரண்டுமே காதலின் புது பரிமாணங்களைக்
காட்சிப்படுத்துகிறது. அன்புடன் இதயம் கவிதைத் தொகுப்பு முழுவதுமே
அன்புமயமாய் உள்ளது. மொழியின் மீதான, நாட்டின் மீதான , சக மனிதனின்
மீதான , தாயின் மீதான அனைத்துவித அன்பின் மொழிகளை அளித்த புகாரி
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
அன்புடன் மதுமிதா

இலக்கணப்போலி என தன்னடக்கமாய் குறிப்பிட்டுக்கொண்ட கவிஞர் (கவிதை நடையில்
கட்டுரைகளில் அற்பதமாய் பின்னுகிறார். ஏனோ கவிஞன் என
ஒப்புக்கொள்வதில்லை. ஒருவேளை பா.ரா அவர்களுக்கு கவிதை பிடிக்காதென
நேரடியாய் சொல்வது போல் வேறு யாரேனும் சொல்லிவிடக் கூடாதெனும் முன்
ஜாக்கிரதை உணர்வாயிருக்குமோ ஜெயந்தி & ரமா ) மன்னிக்கவும் உரைநடைக்கார்
இதழாசிரியர்
தலமையுரை ஆற்ற வந்திருக்கும் திரு.மாலன் அவர்கள் செவ்வனே தலைமை உரை
ஆற்றியுள்ளார்.
அவர் கூறியது போல் ஓர் பொன் வேளையின் வைரத் துளிகளில் பங்கு பெறுகிறோம்
என்ற உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது.
அதுவும் தமிழுக்காக , புகாரியின் கவிதைக்காக என்கையில் பெருமித உணர்வு
ஆட்கொள்கிறது
இதை இந்த நிமிட அனுபவத்தை உணர்பவர்களுக்கே உணரமுடியும். மாலனின் அதே
உணர்வு தான் எனக்கும் என்பதால் அவரின் வார்த்தைகளை அவ்வண்ணமே
வழிமொழிகிறேன்.
இனிப்பு இனிப்பாய் இருக்கிறெதென சுவத்தவர்களாளேயே சொல்ல இயலும். இந்த
வாய்ப்பு இந்த நிமிடம் கிடைத்தமைக்கு இணைய தமிழ் ஆர்வலர்கள்
அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புவியெங்கும் புகாரியின் கவிதை மணம் பரவிட வாழ்த்துக்கள்.
அன்புடன் மதுமிதா

உபசரிப்பு: எழில்நிலா மகேன், கனடா
நானும் அமைதியாக ஒரு பக்கத்தில் இருந்து நிகழ்ச்சியை
அவதானித்துகொண்டிருக்கின்றேன். ஒவ்வொருவரின் முகபாவங்களையும்
இங்கிருந்துகொண்டு கவனிக்கக்கூடியதாக இருக்கின்றது. மாலன் அவர்களின்
உரையின் பின்னர் நண்பர் புகாரியின் முக மலர்ச்சியைப் பார்க்கவும்
வேண்டுமா?
மதுமிதாவின் வாழ்த்துரை பிரமாதம்!
நட்புடன்,
எழில் நிலா மகேன்.

வாழ்த்து: கீதா, டொராண்டோ, கனடா
இன்னொரு மூலையிலிருந்து -
ஆல்பர்ட்டின் முகவுரையும், மாலனின் பேச்சையும் படித்த போது, நானே ஒரு
அரங்கத்திலிருந்து கவனிப்பது போல் தோன்றிற்று.
'Reality TV'
என்று சொல்லிக் கொண்டு கற்பனையை அடியோடு
வேரறுத்துக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் எந்த வித ஊடகங்களின் துணை
இன்றி வார்த்தைகளால் புத்தக வெளீயீட்டு விழா நடத்துபவர்களுக்கு நன்றி
கூற வார்த்தைகளில்லை !
அருமையான் யோசனை!
அற்புதமாக நடந்து கொண்டு இருக்கிறது ....
"நெஞ்சைப் பிசைந்து
உயிரைக் கரைக்கும் எழுத்தையும்
நெஞ்சாரப் பாராட்ட
நெஞ்சுகொள்ள மாட்டார் சிலர்"
என்ற கவிஞசரின் மனக்குமறலை அடியோடு அறுத்து எறிய இணையத்தில் முதல்
கவிதைப் புத்தக விழா நடந்து கொண்டிருக்கிறது. பாராட்டுக்கள் கவிஞரே -
"இக்குழு அக்குழு என்ற
இணைய குழுக்கள்"
இருந்தும், அனைவரும் சேர்ந்து கொண்டாடவும் ஒரு வழி வகுத்து விட்டீர்கள்
!! பெரியவர்கள் விழா இனிதே நடந்து முடிவுற எல்லாப் பணிகளையும் செவ்வனவே
செய்து வர,
ஒரு முலையிலிருந்து பெருமிதத்தோடு, தமிழ் செழித்து வளரும் இவர்கள்
துணையோடு என்று நம்பிக்கையுடன், அனைவருக்கும் நன்றி கூறி
அன்புடன் கீதா கனடா

வாழ்த்து: குமார்
புரிந்தும் புரியாததுமாக அரங்கத்தில் நுழைந்தவனுக்கு இன்ப அதிர்ச்சி.
புரிபட சில இணையவெளி மடல்களும் கனேடியர்களின் கைதட்டல்களும்
தேவையாயிற்று. இணையத்தில் தமிழ் உலகக் கவிஞனின் நூல் வெளியீட்டு விழா.
புதுமையான இந்த விழா, அற்புதம். கவிஞர் புகாரியின் கவிதைகளை அவ்வப்பொழுது
தமிழ் உலகத்தில் படித்ததுண்டு. நெகிழ்ததுண்டு. சிந்தனையில்
ஆழ்ந்ததுண்டு. நம்பிக்கை கொண்டு எழுந்ததுண்டு. அவர் கவிதைகள் என்
மனதில் செய்த மாயங்களை அந்த படைப்பாளியுடன் இதுவரை அவருடன்
பகிர்ந்ததில்லை. அதற்கு இதோ ஒரு வாய்ப்பு. அரங்கத்தின் ஒரு மூலையில்
நானும் ஒன்றிவிடுகின்றேன். விழா இனிதே நடந்தேறட்டும்.
அன்புடன், குமார்.

வணக்கம் திரு.குமார் அவர்களே,
நீண்ட நாட்களின் பின்னர் இப்படி ஒரு நிகழ்ச்சியில் சந்திப்பதில்
மகிழ்ச்சியே.
நட்புடன், எழில் நிலா மகேன், கனடா

அரிய கவிஞர் ஆன கெழுதகை நண்பர் புகாரிக்கு வாழ்த்துக்கள்,
நா. கணேசன், அமெரிக்கா

--வரவேற்பு & உபசரிப்பு: பாரத், பாண்டியன்,
எழில்நிலா மகேன்
அண்ணே வந்துட்டேன் வந்துட்டேன், தாமதமா வந்ததிற்கு மன்னிக்கவும்.. என்ன
செய்ய ஒரே போக்குவரத்து நெரிசலில் சிக்கி விழா நடக்கிற இடத்திற்கு வர
கொஞ்சம் தாமதமாகிவிட்டது.
அய்யா பாண்டியரே. அங்க பாருங்க நம்ம கூட்டத்தை அண்ணன் ஞானவெட்டியான்,
அண்ணன் முத்து நிலவன், அண்ணன் இளங்கோ, அண்ணன் சந்திரபோஸ், அண்ணன்.
இராமகி எல்லோரும் நிக்கராங்க அவுங்களுக்கா நாம முன்பதிவு செய்திருக்கோமே
அந்த இருக்கைக்கு அழைத்து கொண்டு போங்க..
அன்பு அண்ணே வரவேற்புரை முடிஞ்சதும் நீங்க அரங்கத்தின் வாயிலுக்குச்
சென்று சந்தனம் கொடுங்க அண்ணா..
பாரத்

இணையத்துல வந்தாலும் போக்குவரத்து தொல்லை விடலியா.. காலையில தாமதமா
எழுந்தேன் அப்டின்னு ஒத்துக்கங்க.. (எத்தனை பேர் காதில இது மாதிரி
நாங்க பூ சுத்திருப்போம்!!). விழா நல்லபடியா முடியட்டும்.. உங்களை
பாத்துகிறேன்..
ஐயா எல்லாருக்கும் வணக்கம்.. ஒரே ஊர்ல இருந்தாலும் நானும் ஐயா
முத்துநிலவனும் ஒண்ணா வரவே மாட்டோம் போல இருக்கு!! இளங்கோ அண்ணா நல்லா
இருக்கீங்களா? திருவாரூர்ல பாத்தது.. போஸ் ஐயா வணக்கம்.. என்ன....???
நீங்க இராமகி ஐயாவா.. மன்னிக்கனும்.. கொஞ்சம் சொதப்பிட்டேன்..
கோவிக்காதீங்க.. போஸ் ஐயா.. ஏ சி பொட்டி பக்கத்துல உங்களுக்கு நாற்காலி
போட்டிருக்கோம்.. குளிர் ஒன்னும் பிரச்சனை இல்லையே. உங்களுக்கு குளிர
வாய்ப்பே இல்லை. பக்கத்துல தான் இளங்கோ அண்ணா இருக்காரே..
அது சரி.. நிகழ்ச்சிய யார் தொகுத்து வழங்குவது..?
பாண்டியன்

வணக்கம் வாசன் அவர்களே, மண்டபத்திற்கு முன் பக்கமாக நிறைய இடம்
இருக்கின்றதே! அங்கே உட்காருங்கள்!
ஆமா! இந்த சிங்கை மணியம் சார் எங்கே போனார்? ரொம்ப நாளா அவரோட குரலையும்
கேட்கல. எழுத்தையும் பார்க்கல. 1997 ல் தமிழில் வலைப்பக்கம் பின்ன
உற்சாகம் அளித்த நண்பர்களில் அவரும் ஒருவர். கொஞ்சம் குரலைக்காட்டலாமே!
இந்த விழாவிலாவது பழைய நண்பர்களைச் சந்திக்கலாம் என்ற ஆவலில் அங்கும்
இங்கும் நோக்கியபடி...
எழில்நிலா மகேன்
*
வாழ்த்து: வாசன், நியூ மெக்ஸிகோ
நண்பர் குமார்,கீதா ஆகியோரின் அஞ்சல்களைப் படித்த பிறகு, பழைய அஞ்சல்களை
படித்ததில் நிழல்வெளியில் நடைபெறும் முதல் தமிழ் நூல் வெளியீட்டு விழா
இது என்பது புரிந்தது. காலம் தாழ்த்தி புரிந்து கொண்டதால்,
சாளரத்திற்கு அருகில் நிற்க மட்டுமே இடம் உண்டு என்ற வகையில், அங்கே
நின்று விழாவை கண்ணுற எண்ணியுள்ளேன்.
புதுமையான முறையில் நடத்தப்படும் இவ்விழா இனிதே நடைபெற நல்வாழ்த்துகள்.
வாசன்

நிகழ்ச்சி ஒழுங்கு: ஆல்பர்ட், அமெரிக்கா
அட இங்க பாருங்கப்பா.... உலகம் சுற்றும் கீதா எங்கோ பறந்து போயிருக்காங்க
இந்த விழா நேரம் பாத்துன்னுக் கிட்டு இருந்தோம். எங்கிருந்தோ டாண்ணு
ஆஜராகிட்டாங்களே!
ஆமா! மாலன் பேசும்போது கவனிச்சியா? சும்மா ப்ளாஷ்...ப்ளாஷ்...ன்னு
காமிராக்கள் பளிச்சிட......
அட நீ! வேற! அவரு மொகத்தை எங்க திருப்புறாறோ அங்கல்லாம் ஜூம் பண்ணி ஷ¥ட்
பண்ணித் தள்ளிக்கிட்டிருந்த சன் டீவிக் கேமரா மேனைப்
பாத்தியா...பாவம்டா... நாந்தான்
அவருக்கு சூடா சாயா வாங்கிக் கொண்டு போய் குடுத்தேன்! ஒடனே மாலன் அண்ணே,
கண்ணைக் காமிச்சு என்னைய மேடைக்கு கூப்புட்டாருல்ல.....
எதுக்கு?
சன் டீவிய ஸ்பெசலா கவனிச்சதுக்கு ஒரு டேங்க்ஸ் சொல்லப் போறார்னு
நெனைச்சேன்... ஆனாக்கா...போனவுடனே வுட்டாரே ஜூட்டு.... " தொண்டர்
படைத்தம்பி அவரு, ஸ்டார் டிவி, அது சிஎன்.என், அந்த ஓரமா இருக்குறவரு
ஜெயா டி.வி....ராஜ்..விஜய்...ஸ்டார்ன்னு சொல்லி அவங்களுக்கு டீ, காபி,
குடுங்க... அப்புறம் சோடா கலர் எல்லாம் வேண்டாம்... அங்க எளனி
வெச்சிருக்காங்க... அதக் கூட வாங்கி வந்து எல்லோருக்கும் குடுங்கண்ணு
ஒரு 500 ரூபா காந்தி நோட்டைக் குடுத்தாரு! வாங்கிக்கினியா....?
அய்யோடா....அம்புட்டுதான்....பழனி ஐயா...ஞானப்பழம் குடுத்து நம்பள மொத
ஆளா ஊரப்பாக்க அனுப்பீர மாட்டாரு? அண்ணா..நீங்க சொன்னா ஒடனே
எதாஇருந்தாலும்
செய்யணும்ன்னு பெரிய உத்திரவே பழனி ஐயா, ஆல்பர்ட் சார், மணியம் ஸாரு
சொல்லீருக்காக. இங்க இல்லாத சமாச்சாரம் எதாவது கேட்டாலும் எங்கிட்ட
வந்து பணம் வாங்கிக்கன்னு மணியம் ஸார் சொல்லீருக்காகன்னு சொல்லீட்டு
ஓடி வந்துட்டேன்.
அப்பொறம் மாலன் சார் சொன்ன ஆளுங்களை எல்லாம் கவனிச்சியா? பின்ன...
அவங்களே... இதுவரை நாங்களும் எத்தினியோ பங்சசனுக்கு
பாயிருக்கோம்ப்பா...இப்டிக்கவனிச்சதே இல்லைன்னு எல்லாரும்
சட்டிபிகேட்டே குடுத்தாங்களா?!
சரி..சரி அங்க ஒரு கூட்டம் வருதே... அது என்ன?
ஒனக்கு விசயம் தெரியாதா? காலையில தொண்டர் படை ரோல்கால்ல ஆல்பட்
சொன்னாரே...நீதான் முனைவர் ஐயா, அனந்த் கூப்புட்டாருன்னு
போயிட்டியே..... இன்னைக்கு காலையில எட்டு மணிக்கு அந்த மும்பைக்
கவிஞரம்மா மாதவி புகாரி அண்ணனோட நூலை வெளியிடப் போறாங்களாம்... அதுக்கு
பிபிசி...யில இருந்து வந்து நேரடி ஒளிபரப்புக்கு
நம்ம லண்டன் அய்யா சிவாபிள்ளை ஏற்பாடு செஞ்சுருக்காராம். அதான் ஒரு
பரிவாராமே அவரு பின்னாடி போகுதா?
இந்த டிவி, பத்திரிக்கைக்காரங்க கூட்டமே ஒரு திருவிழாக் கூட்டம்
மாதிர்¢யில்ல இருக்கு?
ஆமாமா...ஒலகத்துலயே இது மாதிரி பங்சன் இதான் மொதலாம்.... மாலன் அய்யா
சொன்னாரு கேட்டியில்ல....?
அதுமத்திரமா சொன்னாரு... ஒலகத்துல எந்த மொழியும் செய்யாத சாதனைய நம்ம
தமிழ் மொதலாவதா செஞ்சு சரித்திரம் படைச்சுட்டுதாச் சொன்னாரே!
அடேங்கப்பா...அங்க பாரு.... அவங்க தாம் மாதவி அம்மாவா.... பட்டுப்புடவை
சரசரக்க எம்புட்டு அழகா நடந்து போறாங்க... கூடவே போறது.. அவங்க
மகனும்,மகளுமா?
அடே.... நம்ப பாண்டி அண்ணே விசில் ஊதீட்டாரு..நம்ம வேலைய
கவனிக்கனும்..வா...வா... அன்பு வர்றாரு..வா..வா..
வாசன்..குமார் ஸார் எல்லாம் ஓரமா நிக்கிறாங்க பாரு அவங்களுக்கு
மேல்வரிசையில இன்னும் ரெண்டு சேர் போட்டு உக்கார வைப்போம்
ஓடியா.....
( தமிழ் உலக தொண்டர்படையில் இருவர் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டீங்களா?
உண்மைதான்... இந்த இனியபொழுது இனியருமுறை வாய்க்காது. உலகில் மாநாடு
என்றாலும் கூட பகலில் நடக்கும் இரவு குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்
அந்த இடம் வெறிச்சிட்டுப் போகும்.... ஆனா..இந்த மாநாட்டைப் பாருங்க....
உலகின் ஒரு பகுதி பகல் மற்றொரு பகுதி இரவு... இந்த மாநாடும் இரவும்
பகலும் நடந்துகிட்டே இருக்குது... என்று மாநாட்டுப் பந்தல் காலைப்
பிடித்தவண்ணம் இருவர் பேசிக்கொண்டிருந்தனர்...)
நேரம் நெருங்கிக்கிட்டு இருக்கு விழா மேடையில் ஒவ்வொருவராய் வந்து அமரத்
துவங்குகின்றனர். புன்சிரிப்புக்குச் சொந்தக்காரராய்.... இதோ மாலன்
மேடை ஏறுகிறார்.....
கூடவே மாதவி.....கரவொலிகள் மிதமாக ஒலித்தவண்ணம் இருக்க....
பார்வையாளர்கள் காலைச் சிற்றுண்டி முடித்து இருக்கைகளுக்கு
திரும்பிக்கொண்டிருக்கின்றனர்...
ஒலி வாங்கியருகே யாரோ வர்றாங்க... சரி.. என்ன நடக்குதுன்னு பாப்போம்.
 |
|
| |
'எழில்
நிலா'வின் சிறப்புப்பக்கம் |
 |
|
|