| |
|
|
 |
| |
2.
விழா அழைப்பிதழ், வரவேற்பு, மற்றும் விருந்தோம்பல் |
|
| |
|
|
| |
|
|
| |
கவிஞர் புகாரியின் "அன்புடன் இதயம்"
இணையத்தில் முதல் கவிதை நூல் வெளியீட்டு விழா!
<> அழைப்பிதழ் <> |
|
| |
|
|
|
| |
| நாள்: |
|
8-2-2004 - 15-02-2004 |
| |
|
|
| இடம்: |
|
தமிழ் உலக
இணையவெளிப் பந்தல். |
| |
|
|
| விழாத்
தலைமை: |
|
மாலன்,
ஆசிரியர், திசைகள். |
| |
|
|
|
முன்னிலை: |
|
பேராசிரியர்.சிவாபிள்ளை, கோல்ட் ஸ்மித்
கல்லூரி,
இலண்டன் பல்கலைக் கழகம் |
| |
|
|
|
வரவேற்புரை: |
|
அன்பு |
| |
|
|
|
வாழ்த்தும், விமர்சனமும் வழங்குவோர்: |
|
கவிஞர்.மாதவி, அன்புடன் இதயம் நூலை
வெளியிட்டு
(தமிழ் உலக மடலாடற் குழுவின் சார்பில் நண்.மணியம்,
முனைவர்.வி.எஸ்.அனந்த நாராயணன் பெற்றுக்
கொள்கிறார்கள்.) வாழ்த்துரை வழங்குகிறார். |
|
|
|
| |
|
கவிமாமணி. இலந்தை இராமசாமி
கவிஞர்.சாபு
கவிஞர்.சேவியர்
கவிஞர்.கற்பகம்
கவிஞர்.முத்துநிலவன்
கவிஞர்.ஆசாத்
எழுத்தாளர்.ஜெயந்தி சங்கர் |
| |
|
|
|
சிறப்புரை: |
|
தமிழ் உலக நண்பர்கள் மற்றும்
பிற மடலாடற் குழுக்களின் நண்பர்கள் |
| |
|
|
|
கலை நிகழ்ச்சிகள்: |
|
கரகாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம்,
பரத நாட்டியம் நிகழ்ச்சிகள் இடம்பெறும். |
| |
|
|
|
ஏற்புரை: |
|
கவிஞர்.புகாரி |
| |
|
|
|
கெளரவிப்பு: |
|
கவிஞர் புகாரிக்கு பொன்னாடை போர்த்திச்
சிறப்பிப்பவர் கவிஞர்.முத்துநிலவன்,
முற்போக்கு எழுத்தாளர் சங்கம்,தமிழ் நாடு. |
| |
|
|
| |
|
தமிழ் உலகம் சார்பில் கவிஞர் புகாரிக்கு
"பொற்கிழி" வழங்கி கெளரவிப்பவர்
எழில் நிலா மகேன், கனடா. |
| |
|
|
|
தமிழ் உலக அறிவிப்பு: |
|
ஆல்பர்ட் |
| |
|
|
|
நன்றியுரை: |
|
கவிஞர்.நம்பி, விழாக்குழுவின் சார்பில் |
| |
|
|
|
நன்றியுரை: |
|
ஆறு.பழனியப்பன், தமிழ் உலகம் சார்பில். |
| |
|
|
|
உலகின் முதல்
இணையவெளி புத்தகம் வெளியீட்டிற்கு அனைவரையும் வருக வருகவென்று
வரவேற்கின்றோம். தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் அனுப்பப்பட்ட
அழைப்பிதழாக இதனையே கருதி தாங்களும், தங்கள் நட்பும் சூழ
இவ்விழாவில் கலந்து சிறப்பிக்கக் கேட்டுக்கொள்கிறோம்.
|
முனைவர்.வி.எஸ்.அனந்த நாராயணன்
இராமச்சந்திரன் உஷா
பாரத்
அன்பு
பாண்டியன்,
கவிஞர் நம்பி
விழாக் குழுவினர்.
மற்றும்
பழனி
ஆல்பர்ட்,
மணியம்,
தமிழ் உலக மட்டுறுத்துனர்கள்
மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்கள். |
|
|
| |
குறிப்பு : - இந்த அழைப்பிதழை மற்ற சகோதர மடலாடற் குழுவில்
உறுப்பினராயிருப்பவர்கள் அந்தந்த குழுக்களுக்கும் அனுப்பி அவர்களையும்
திறளாகப் பங்கேற்க வைத்து விழாச் சிறக்க உதவும்படி கேட்டுக்கொள்கிறோம்.

A Real mile stone in the History
of Tamil Poetry...
Anbiniya naNbarkku, vaNakkam. This is the first of its type, in the
history of tamil poetry - Poetry collection book release function in
Inter-Net ! Pl. do 'come' to the function, and greet our beloved
poet Kavinjar Buhari. (non member of 'Tamil ulagam' can also send
their comments, greets to the function as usual - this invitation is
being sent as per the request of the commitee of the function)
PL. FORWARD THIS INVITATION TO ALL OF (Y)OUR TAMIL E-FRIENDS.
Na.Muthu Nilavan.

அழைப்பு: புகாரி, டொராண்டோ, கனடா
பேரன்புமிக்க இணையத்தோரே,
உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.
இது இணையத்தின் முதல் நூல் வெளியீட்டு விழா. இதில் என் 'அன்புடன் இதயம்'
கவிதை நூல் வெளியிடப்பட இருப்பதில் உங்களோடு நானும் பூரிப்படைகிறேன்.
என் நூலுக்கான தங்களின் மதிப்புரைகளை, வாழ்த்துக்களை, மற்றும்
விமரிசனங்களைத் தமிழ் உலகத்தில் இவ்வாரம் இடுங்கள்
என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்விழாவைச் சிறப்பு விழா
ஆக்குவதற்குத் தங்களின் பொன்னான ஒத்துழைப்பை மிகுந்த அன்போடு நாடும்
உங்கள்
அன்புடன் புகாரி
அன்புடன் இதயம் கவிதைகளை இங்கே காணலாம்
http://ezilnila.com
(நன்றி மகேன்).
தமிழ் உலகம் கோப்புகள் பகுதியில்
PDF கோப்புகளாகவும் காணலாம்.

"தூங்கும் புலியை பறைகொண் டெழுப்பினோம்
தூய தமிழரைத் தமிழ் கொண்டெழுப்பினோம்"
-பாவேந்தர்.
தமிழ் உலக விழா! தங்க நிகர் விழா!!
இணையம் காணும் முதல் விழா!
அறிவிப்பு வருகிறது தமிழ் உலகில்!
அதைப்படித்த ஒருவருக்கு பொத்துக் கொண்டு வருகிறது கோவம்!
ஆகா, மக்கள் என்னமாய்க் கோபப்படுகிறார்கள்? எதற்குக் கோபம்? ஏன் கோபம்?
அறிவிப்பிலிருந்த இதைப் படித்துவிட்டுத்தான் அந்தக் கோபம்!
>>முதல்வாரத்தில் விழாத்தலைமை, விழாக்குழு மட்டும் அறிவிக்கப்படும்!
முன்னிலை, வரவேற்புரை, சிறப்புரை, நன்றியுரை எல்லாம் விழாப்பந்தலுக்கு
யார் முன்னதாக வருகின்றார்களோ அவர்களே தாமாக நிகழ்த்தலாம்; இறுதியில்
பொன்னாடை போர்த்தி கெளரவிக்கவிப்படுவார் கவிஞர் புகாரி!>>>
விழாவை எல்லாருக்கும் அறிவிக்கும் அழைப்பிதழ் , நிகழ்ச்சி நிரல் எதுவுமே
கிடையாதா? என்னய்யா இது அநியாயமா இருக்கு! மைக் செட் வேண்டாம் சரி,
அழைப்பிதழே இல்லாமல்...?...இப்படி அன்போடு கோபம் கொள்கிறார் ஒருவர்!
தனிப்பட்ட அழைப்பு, சரி. ஊருக்குச் சொல்லும் விழாவானால்கூட பரவாயில்லை!
உலகுக்கே, எந்த மொழிக்காரனும் நெனைச்சுக்கூடப் பாக்காத சமாச்சாரத்தை
சத்தம் இல்லாமச் செய்யணும்ன்னா... இது சரியில்லைங்கோ! வெத்திலை
பாக்குவெச்சு நடுவால அழைப்பிதழ் ஒன்றை வெச்சாத்தான் மருவாதைங்கங்கிறார்
ஒருத்தர்!
இன்னொருத்தரோ, நம்ம ஊர் அரசியல்வாதிகளோட பழக்கம் போல இருக்கு; பழக்க
தோசம்! 'எங்கள் கோரிக்கை ஏற்கப்படாத இந்த சபையிலிருந்து நான் வெளி
நடப்பு செய்கிறேன்' ஹி ஹி எங்கள் ஊரில் சட்டசபை குளிர்காலக்
கூட்டத்தொடர் இன்றுதான் ஆரம்பம்...ங்கிறார்! பாத்தேன். எதுக்கு
பொல்லாப்புன்னு அவசரத்துல ஒரு அழைப்பை உலவவிட்டுவிட்டேன். அடுத்தாப்புல
ஒரு மெயிலு மயிலு மாதிரி வருது!
ம்ம்ம்ம்ம்... அண்ணாச்சிக்கு எங்களை எல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாம் தெரியாது.
மத்ததுக்கு மட்டும் எங்களைக் கேப்பீங்க? ஆனா, இது நம்ம வீட்டுக்
காரியமாச்சுங்களே..... எங்களை
நீங்க வுட்டுட்டாலும் நாங்க அப்புடி வுடமுடியுமா?ன்னு!
ஆமாம், நண்பர்களே,நேரக் குறைவு; அழைப்பிதழில் என் பெயர் இல்லை என்ற
குறைபடாமல் உங்கள் விழாச் சிறக்க நீங்கள் ஒவ்வொருவரும் பங்கெடுத்துச்
சிறப்பிக்க வேண்டும் என்று மீண்டும்,மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
விழாத் துவங்க ஓரிரு நாளிருக்கும்போது என் வலது கரம் இங்கில்லை என்பது
மனதுக்குள் மறுக வைக்கிறது.
ஒவ்வொருவருக்கும் நான் தனித்தனியே தருகின்ற இவ்விணைய அழைப்பிதழையே தனி
அழைப்பாகக் கருதி வருகை தந்து, விழாக்குழுவினருக்கும்
ஏற்பாட்டாளர்களுக்கும்
ஒத்துழைப்பை நல்கி விழாவைத் திருவிழாவாக்கிட இருகரம் கூப்பிக்
கேட்டுக்கொள்கிறோம்.
"இமைதிற! எழுந்து நன்றாய் எண்ணுவாய்!
தோளை உயர்த்துச் சுடர்முகம் தூக்கு!
மீசையை முறுக்கி மேலே ஏற்று!
விழித்தவிழியில் மேதினிக் கொளிசெய்!
ஏறு! வானை இடிக்கும் மலைமேல்!
ஏறு விடாமல்! ஏறு மேன்மேல்!
ஏறி நின்று பாரடா எங்கும்;
'என்குலம்' என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கள் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள்!... "
என்ற பாவேந்தரின் கவிதை என் அடிமன வானில் விரிகிறது.
விரியும் விழிகளில் தமிழ் உலக விழாப் பந்தல் மிடுக்காய் காட்சி தருகிறது!
நாளை ஒருநாள் தானே இருக்கிறது...! இல்லை..இல்லை இன்று ஒருநாள்தான்....!
நாளை விழா என்று உலகின் இன்னொரு உலகம் கூவும் செய்தி
என்னைப்பரபரப்பாக்குகிறது! வாருங்கள் புகாரியின் நூலுக்குச் சிறப்புச்
செய்வோம்! பாருங்கள் பாருக்குள் உலகளாவிய விழாவை!
இணைய வராலாற்றில் இந்தச் செய்தி பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படப் போவது
நிச்சயம்!
அன்புடன்,
ஆல்பர்ட்,
பழனி,
மணியம்,
விழா ஏற்பாட்டாளர்கள்.

தமிழ் உலக இணையப் பந்தலில் நடக்கும்
"கவிஞர் புகாரியின் "அன்புடன் இதயம்" நூல் வெளியீட்டு விழா
அழைப்பிதழ் பார்க்கச் சுட்டுக...
www.e-sangamam.com

--வரவேற்பு: உஷா, துபாய்
யாருப்பா அது மைக் செட்டிங்க், சத்தம் சரியில்ல?
தோ வண்டேன் சார்!
ஆமா, இன்னா விளா சாரு இது?
கவிஞர் புகாரின்னு ஒருத்தர் இணையத்துல, அதுதான் கம்ப்யூட்டருக்கு தமிழ்
பேரு, பூந்து விளையாடுராரு. அவரு புத்தக வெளியிட்டு விழா.
அப்புடியா சாரு! பெரிய பெரிய ஆளு எல்லாம் வராங்க எனக்கு கொஞ்சம் யாரு,
இன்னான்னு சொல்லு சார்?
பளீச்சின்னு இருக்காரே அவர தெரியுதா?
நல்லா தெர்யும், டீவி, பட்த்துல வர்வாரே மாலன் தானே அவுரு? அவுரு
பக்கத்துல கீறாங்களே அவுங்க?
ஒரே வார்த்தைல சொல்லட்டா! இங்க வந்து இருக்கிறவங்க எல்லாரும் தமிழுக்கு
சேவை செய்கிறவங்க. தமிழ்மொழிக்கு அவங்க தங்களையே
அர்பணிச்சிக்கிறாங்கன்னா மிகையில்லை. போதுமா?
மேடைல போட்டு இருக்கிற நாற்காலி நல்லா இல்லே!
சிம்மாசனம் மாதிரி இருக்குமே அத கொண்டு வந்து போடு!
மயிலாட்டம், ஓயிடாட்டம் பார்ட்டிங்க வந்தாச்சா?
அவுங்களுக்கு டிபனு, காப்பி கொடுத்தியா?
எல்லாம் ஆச்சு சாரு! நா கண்டிராக்ட்ரு. என் வேல ஆச்சு. நீங்க ஆரம்பிங்க.
நா ஒரு ஓரமா நின்னு பாக்கறேன்.
உஷா, துபாய்

--வரவேற்பு: உமர், துபாய்
அதெச்சொல்லு...
தமில பாடறத்துக்கும் தாரை தப்பட்டை வேணுங்கிறியா? என்னத்தெ
சொல்றது... இன்னிக்கி காலம் அப்புடித்தான் இருக்குப்பா..
கான்டிராக்டரே, கொஞ்சம் வீடியோ கேமராவெ ஸ்டாண்டு போட்டு நிறுத்தி
வைக்கிறத்துக்கு எடத்தெ ஒதிக்கி வெச்சா நல்லாருக்கும்...
படம் புடிக்கிற சாக்குலெ நானும் கொஞ்சம் கேட்டுக்குவேனில்லே...
உமர், தமிழ்நாடு

--வரவேற்பு: பாண்டியன்
விழாவிற்கு முதல் நாள் இரவே வந்துவிட்டேன்.. (சற்று தாமதம்தான்!!)..
(அழைப்பிதழ்
கொடுத்துட்டு வரதுக்கு நேரமாகிபோச்சு!)..
அதுக்குள்ள மைக் டெஸ்டிங் பண்ணியாச்சா. விழாவுக்கு
வரவேண்டியவங்க எல்லாம் வந்துட்டாங்களான்னு பாருங்க ..
பாண்டியன்

--வரவேற்புரை: அன்பு, துபாய்
அன்பு இணைய நண்பர்களே...
முதன் முறையாக தமிழ் உலக இணைய பந்தலில் கவிஞர் புகாரியின் அவர்களின்
முத்தான படைப்பான 'அன்புடன் இதயம்' நூல் வெளியீட்டிற்கு இங்கு திரளாக
வருகை
தந்திருக்கும் அன்பு இதயங்களே, இந்த இனிய விழாவிற்கு தலைமேற்றுள்ள
திரு மாலன் அவர்களையும், முன்னிலையேற்றுள்ள பேராசிரியர் சிவாபிள்ளை
அவர்களையும், இந்நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கவுள்ள கவிஞர் மாதவி
அவர்களையும் விழாக்குழுவினரின்
சார்பில் அன்போடு வரவேற்கிறேன்.
இந்நூல் குறித்து வாழ்த்துரைகளும் விமர்சனங்களும் வழங்க இங்கு வருகை
புரிந்துள்ள கவிஞர்கள் கவிமணி இளந்தையார், சாபு, சேவியர், கற்பகம்,
முத்துநிலவன், ஆசாத், மற்றும் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் ஆகியோரையும்,
மேலும் சிறப்புரை வழங்கவிருக்கும் தமிழ் உலக நண்பர்கள் அனைவரையும்,
பிற மடலாடற் குழுக்களின் நண்பர்களையும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள
கலைஞர்களையும் அன்புடன்
வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
ஏற்புரை ஏற்கவிருக்கும் இந்நூலின் ஆசிரியர் கவிஞர் புகாரி அவர்களையும்,
இவ்விழா இத்துனை சிறப்புற நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ள
தமிழ் உலக மட்டுறுத்துனர்கள், விழா ஒருங்கிணைப்பாளர்கள் பழனி, ஆல்பர்ட்,
மணியம் ஆகியோரையும் மற்றும் இவ்விழாவிற்காக இடைவிடாது ஒத்துழைப்பு
நல்கியுள்ள நல்ல உள்ளங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி விழாக்குழுவினரின்
சார்பாக அன்புடன் வருக வருக என வரவேற்கிறேன்.
வணக்கங்களுடன்
அன்பு
08.02.2004
 |
|
| |
'எழில்
நிலா'வின் சிறப்புப்பக்கம் |
 |
|
|